கர்நாடகாவில் அடுத்த 14 நாட்களுக்கு பொது முடக்கம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை அதி தீவிரமடைந்து வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும் இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் கர்நாடகாவில் இன்று ஒரேநாளில் 29 ஆயிரத்து 438 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 13 லட்சத்து 4 ஆயிரத்து 397 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து கர்நாடகாவில் நாளை (27-ம் தேதி) இரவு முதல் அடுத்த 14 நாட்களுக்கு பொது முடக்கம்பொது முடக்கம் அமலுக்கு வருகிறது. இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்கு மட்டுமே அனுமதி என அம்மாநில அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.