Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் இன்று 25 மாவட்டங்களில் கன மழை… வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்…!!!!!

பெங்களூர்  மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து கொண்டிருக்கிறது. ராமநகர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அர்க்காவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் சன்னப்பட்டனா டவுனில் உள்ள பிடி காலனி வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. தூம கூறு மாவட்டம் மதுகிரி கொரட்ட கெரே, உலியூர் துர்கா பகுதியிலும் கனமழை பெய்துள்ளது. ஊலியூர் துர்கா பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார் அவரை அந்த பகுதி மக்கள் மீட்டுள்ளனர். சக்பள்ளாபூர் மாவட்டம் கவுரி பித்தனுரில் பெய்த கனமழையின் காரணமாக குஷாவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் ஆற்றுப் பாலத்தை கடக்க முயற்சி செய்த இரண்டு வாலிபர்கள் அந்த வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். அதில் பிரசாந்த் என்ற வாலிபர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் நேற்று பசவராஜ் என்ற வாலிபர் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இதை போல் கவுரி பித்தனுர் அருகே காதல வேணி என்னும் கிராமத்தில் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கிருஷ்ணப்பா என்பவரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இதற்கிடையே கர்நாடகாவில் இன்று 25 மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் நேற்று தகவல் தெரிவித்துள்ளது.

Categories

Tech |