கர்நாடக மாநிலத்தில் தற்போது வரை வசூலிக்கப்பட்ட அபராதம் குறித்த தகவலை அம்மாநில அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.அதனால் முக கவசம் அணிவது மற்றும் தனிமனித இடைவெளியை பின்பற்றுவது ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன. மேலும் முகக்கவசம் அணிய அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. அவ்வகையில் பெங்களூரு உள்ளிட்ட கர்நாடக மாநிலம் முழுவதும் கடந்த 4 மாதங்களில் முக கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களிடமிருந்து 3 கோடியே 14 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக முககவசம் அணியாதவர்கள் மாநகராட்சி பகுதியில் ஆயிரம் ரூபாயும்,கிராமப்புறங்களில் 500 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்ததைத் தொடர்ந்து, அபராத தொகை குறைக்கப்பட்டது. கர்நாடக மாநிலத்தில் தற்போது வரை வசூலிக்கப்பட்ட அபராதம் குறித்த தகவலை அம்மாநில அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.