தமிழகத்தை சேர்ந்த 10 பேர், கர்நாடகாவில் இருக்கும் கோயிலுக்கு சென்று வழிபட்டு விட்டு ஊர் திரும்பும் வழியில் எதிர்பாராத விபத்து, 10 பேர் உட்பட, மோதிய காரில் இருந்த 3 பேரும் சேர்த்து, 13 பேரும் உயிரிழந்தனர்..!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே பேரிகை என்னும் இடத்திலிருந்து கர்நாடக மாநிலம் தர்மசாலா கோவிலுக்கு கார் ஒன்றில் 13 பேர் சென்றனர். கோவிலுக்கு சென்று வழிபட்டு விட்டு ஊருக்கு திரும்பும்பொழுது, குனிகல் என்னுமிடத்தில் எதிராக வந்த மற்றொரு கார் பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் பரிதாபமாக 9 மாத குழந்தையும் உயிரிழந்தது. இதை உள்பட தமிழகத்தை சேர்ந்த 10 பேரும், கர்நாடக மாநில பக்தர்கள் வந்த காரில் 3 பேர் என 13 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.