Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் சாலையே ரோஜா சோலையானது…. விலை வீழ்ச்சியால் விவசாயிகள் செய்த வேலை…!!!

கர்நாடகாவில் ரோஜா பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்ததால் பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவர் ரோஜா பூக்களை சாலையோரத்தில் கொட்டியுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் சிக்பல்லாபூர் மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகள் ரோஜா மல்லி போன்ற பூக்களை விவசாயம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் சிக்பல்லப்பூர் மார்க்கெட்டில் ரோஜா மற்றும் மல்லி பூக்களின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதாவது ஒரு கிலோ ரோஜாப்பூ ஐந்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட ரோஜா மலர்களை தள்ளுவண்டியில் வைத்து வீதிவீதியாக விற்பனை செய்யும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசிடம் தங்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

Categories

Tech |