நுகு வனவிலங்கு சரணாலயத்தில் இரண்டு புலி குட்டிகள் பசியால் உயிரிழந்த நிலையில் தற்போது மற்றொரு குட்டியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் வன விலங்கு சரணாலயத்தில் மூன்று புலிகள் உடல்நிலை மோசமாக காணப்பட்டது. அதனை மீட்ட வனத்துறை அலுவலர்கள் மைசூர் உரியல் பூங்காவிற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஒரு புலி குட்டி உயிரிழந்தது. மற்ற இரண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தது.
அதில் மற்றொரு புலிக் குட்டியும் உயிரிழந்தது. உயிரிழந்த புலிகுட்டிகளை ஆய்வு செய்து பார்த்தபோது தங்களது தாயை காணாத ஏக்கத்திலும், பசியாலும் உயிரிழந்தது தெரியவந்தது. புலிகள் கண்டுபிடிக்கப்பட்ட அதே இடத்தில் மற்றொரு புலியின் கால் தடத்தை வன அலுவலர்கள் கண்டறிந்து அந்த புலியை தேடுவதற்கு அங்கு கேமிராக்கள் பொருத்தப் பட்டு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மீதமுள்ள ஒரு குட்டிக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அந்த குட்டியும் தற்போது சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தது. தாயை காணாத ஏயக்கமும், பசியின் காரணத்தினாலும் மூன்று குட்டிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.