கர்நாடக மாநிலம் சிவமோகா நகரில் பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த நபர் வெட்டி கொல்லப்பட்டதை அடுத்து அங்கு பதற்றமான சூழல் காரணமாக அம்மாநில அரசு ஊரடங்கு பிப்ரவரி 26 வரை நீட்டித்துள்ளது. இதில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே மக்கள் நடமாட அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் பள்ளிகளுக்கும் விடுமுறை என்று தெரிவித்துள்ளது. மாநிலத்தின் மற்ற பகுதிகளில் போராட்டம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.