Categories
தேசிய செய்திகள்

“ஆடைக்காக கல்வி அழிப்பு” பல மாணவர்கள் மத்தியில்…. தில்லாக வந்த மாணவி பேச்சு…!!!!

கல்லூரிக்குள் பர்தா அணிந்து வந்த மாணவியை மாணவர்கள் சூழ்ந்து ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட வீடியோ சமூகத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் கடந்த சில தினங்களாக ஹிஜாப் விவகாரம் விஸ்வ ரூபம் எடுத்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஹிஜாப் அணிந்து கொண்டு மாணவி ஒருவர் கல்லூரி வளாகத்திற்குள் வந்துள்ளார். கல்லூரிக்குள் வந்த அந்த மாணவியை  காவி துண்டு அணிந்த பல மாணவர்கள் சூழ்ந்து ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட வீடியோ சமூகத்தில் வைரலாகி வருகிறது.

இந்த சூழலில் அந்த மாணவி செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது” நான் கவலைப்படவில்லை” பர்தா அணிந்ததால்  அவர்கள் என்னை கல்லூரிக்குள் அனுமதிக்கவில்லை. நான் அசைன்மென்ட்டை  ஒப்படைபதற்காக கல்லூரிக்குள் வரும்போது அவர்கள் என்னை சூழ்ந்து ஸ்ரீராம் என்று கோஷமிட்டார்கள் அதற்கு பதிலாக நானும் அல்லா ஹு அக்பர் எனகோஷமிட்டேன் என்றார்.

இதனை  தொடர்ந்து அங்கிருந்த கல்லூரி முதல்வர் மற்றும்  பேராசிரியர்கள் அனைவரும் என்னை ஆதரித்து பாதுகாப்பாக கூட்டிச் சென்றனர். காவி துண்டு அணிந்த அந்த  குழுவில் 10% பேர் எங்கள் கல்லூரி மாணவர்கள் என்றும் மீதமுள்ளவர்கள் வெளியாட்கள் எனவும் அந்த மாணவி கூறியுள்ளார். மேலும் நான் தொடர்ந்து பர்தா அணிவேன், மேலும் இதற்கான போராட்டம் தொடரும், அவர்கள் அடைக்காக  கல்வியை அழித்து வருகிறார்கள் எனவும் அந்தப் பெண் கூறியுள்ளார்.

Categories

Tech |