Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் பள்ளிகளை திறக்கபடுமா?… முதல்-மந்திரி… இன்று ஆலோசனை கூட்டம்…!!!

கர்நாடக மாநிலத்தில் பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்று மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்-மந்திரி எடியூரப்பா இன்று பெங்களூரில் ஆலோசனை நடத்த உள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் தற்போது கொரோனா பாதிப்பு வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. அதனால் தினந்தோறும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் வருகின்ற 15ஆம் தேதிக்கு பின்னர் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பது பற்றி மாநில அரசுகள் முடிவு செய்துகொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து பள்ளி திறப்பதற்கு கர்நாடக அரசு மிக தீவிரமாக ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறது. சிறு குறித்து சுகாதாரத் துறையின் ஆலோசனையை பள்ளிக்கல்வித்துறை நாடியுள்ளது.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் பள்ளிகளை திறப்பது பற்றி பள்ளிக்கல்வித்துறை, மருத்துவக் கல்வித் துறை, சுகாதாரத்துறை மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்-மந்திரி எடியூரப்பா இன்று பெங்களூரில் ஆலோசனை நடத்த உள்ளார். அந்த ஆலோசனை கூட்டத்தில், எந்தெந்த வகுப்புகளுக்கு முதலில் கற்பித்தலை தொடங்க வேண்டும், பள்ளிகள் திறந்தால் அங்கு எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பது பற்றி ஆலோசனை செய்ய உள்ளனர்.

இருந்தாலும் கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் இருப்பதால், எந்த ஒரு காரணத்திற்காகவும் பள்ளிகளைத் திறக்க கூடாது என மாணவர்களின் பெற்றோர் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கிடைக்கும் வரையில் பள்ளிகளை திறப்பது சாத்தியமில்லை என கல்வித் துறை நிபுணர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து எடியூரப்பா மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

Categories

Tech |