Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….. வெளியான அறிவிப்பு…..!!!!!

கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவிலுள்ள அரசு பி.யூ.கல்லூரியில் மாணவ- மாணவிகள் சீருடையை அணிந்து வரவேண்டும் என்று அந்த கல்லூரி நிர்வாகமானது தெரிவித்துள்ளது. இதையடுத்து அக்கல்லூரியில் படித்து வரும் இஸ்லாமிய மாணவிகள் சிலபேர் சீருடையின் மேல் ஹிஜாப் அணிந்து வந்த காரணத்தால், அவர்கள் வகுப்பறையில் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அடிப்படையில் அந்த கல்லூரியில் பயிலும் இந்து மதத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதன் காரணமாக இருதரப்பினர் இடையே பதற்றம் ஏற்பட்டது. இது தொடர்பாக கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்குகளின் வாதம் நிறைவு பெற்ற நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கர்நாடகாவில் உடுப்பி, தட்சிண கன்னடாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (மார்ச் 15) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டையே உலுக்கிய ஹிஜாப் விவகார வழக்கில் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அங்கு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |