Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் மின்கட்டணம் உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து உள்ளதால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கர்நாடகாவில் வீட்டு உபயோகத்துக்கான மின் கட்டணம் 10 பைசா உயர்த்தப்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரு உட்பட நகரப் பகுதிகளில் தற்போது 50 யூனிட் வரை ஒரு யூனிட்டிற்கு ரூ.4-இலிருந்து ரூ.4.10 ஆகவும், 100 யூனிட் வரை ரூ.5.45 இலிருந்து 5.55 ஆகவும், 200 யூனிட் வரை ரூபாய் 7 இலிருந்து ரூ.7.10 ஆகவும், 200 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தபடும் மின்சாரத்திற்கு யூனிட்டிற்கு ரூபாய் 8.05 இலிருந்து ரூ.8.15 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

Categories

Tech |