மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இந்த சட்டங்களை கண்டித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
அரசு பேருந்துகள் இயங்கிவரும் நிலையில் ஆட்டோக்கள், கார்கள் ஓடவில்லை. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக மாநிலத்தில் CIT-யும் AITOC மற்றும் 21 விவசாய சங்கங்கள் இணைந்து முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா ஊரடங்கு விதிகள் அமலில் உள்ளதால் தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். மாநிலம் முழுவதும் ஹோட்டல்கள் திறந்திருக்கும் என ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. எனினும் அரசு பேருந்துகள் வழக்கம்போல் இயக்கி வருகின்றன. பெங்களூரில் மெட்ரோரயில், ரயில்கள் இயக்கப்படுகின்றன.
பால், மருந்துக்கடைகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இயங்கி வருகின்றன. ஆட்டோக்கள், கார்கள் ஓடவில்லை எனினும் விமான நிலையத்திற்கு இயக்கப்படும் வாடகை கார்கள் சேவைகள் பாதிப்பில்லை. முழு அடைப்பு காரணமாக இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட வரும் 30 ஆம் தேதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்களை தடுக்க பல இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.