கர்நாடகாவில் பென்சின் வேதி பொருள் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து தீ விபத்து ஏற்பட்டது.
கர்நாடகாவில் மங்களூர் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் துணை நிறுவனத்திற்கு சொந்தமான டேங்கர் லாரி ஒன்று குஜராத்தில் உள்ள ஒரு பெயிண்ட் நிறுவனத்திற்கு பென்சீன் வேதிப்பொருள் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளது. அப்போது அந்த லாரி உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள அரபில் கார்டு -அங்கோலா நெடுஞ்சாலையில் செல்லும் போது திடீரென விபத்துக்குள்ளாகியது. இதில் பென்சீன் கசிந்து பரவியதால் சாலையை ஒட்டியுள்ள காடுகளில் தீ பிடித்தது. இதனைத் தொடர்ந்து லாரி ஓட்டுனர் மற்றும் கிளீனர் வெளியே குதித்து உயிர் தப்பி விட்டனர். இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தீயணைப்பு படை வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.