Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் 50 இடங்களில் ஐ.டி ரெய்டு… எடியூரப்பாவின் முன்னாள் உதவியாளர் வீட்டில்… வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை..!!

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் உதவியாளரின் வீடு, அதிகாரிகள் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.

கர்நாடகாவின் முன்னாள் முதல் மந்திரியாக இருந்தவர் எடியூரப்பா தற்போது அவர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக பசவராஜ் பொம்மை முதல்வராக இருந்து வருகிறார். எடியூரப்பா முதல்வராக இருந்தபோது நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த 20 ஆயிரம் கோடி முறைகேடு செய்ததாகவும், ஒப்பந்ததாரர்கள் இடமிருந்து லஞ்சம் வாங்கியதாகவும் எடியூரப்பாவின் மகனான விஜயேந்திர மீது குற்றம்சாட்டப்பட்டது.

இதனை தொடர்ந்து வருமானவரித்துறை அதிகாரிகள் அதிகாலை 5 மணி அளவில் முதல்-மந்திரி எடியூரப்பாவின் உதவியாளராக இருந்த வீடு, அலுவலகம் மற்றும் அவருக்கு சொந்தமான நான்கு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மேலும் நீர்ப்பாசனத் துறையில் கணக்கு தணிக்கை அதிகாரிகளாக இருந்த லக்ஷ்மிகாந்த் மற்றும் அமலா ஆகியோருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

இதுதவிர ஒப்பந்ததாரர்கள் ராகுல் என்ற ப்ரைஸ் நிறுவனத்திற்கு சொந்தமான வீடு அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் அதிகாரி அமலா வீட்டில் இருந்து தங்கம் வைர நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மேலும் இந்த அதிரடி சோதனையில் பல ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Categories

Tech |