Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் 8 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு… சுகாதாரத்துறை தகவல்…!!!

கர்நாடக மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை எட்டு லட்சத்தை நெருங்க உள்ளதால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் முதலில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது கடந்த சில மாதங்களாக அதிக அளவு பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,018 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,70,604 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் 64 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 10,542 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கர்நாடக மாநிலத்தில் இன்று மட்டும் 8,005 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதனால் தற்போது வரை கொரோனாவால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,53,829 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் 1,06,214 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |