Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் பெய்த கன மழையால்… “மார்க்கண்டேயன் நதிக்கு தண்ணீர் வந்தது”…. மலர் தூவி வரவேற்ற பொதுமக்கள்…!!!

வறண்டு கிடந்த மார்க்கண்டேயன் நதிக்கு தண்ணீர் வந்ததை பார்த்து பொதுமக்கள் ஆனந்தமடைந்து மலர்தூவி வரவேற்றுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகில் மார்க்கண்டேயன் நதி அமைந்துள்ளது. இந்த நதியின் மூலம் சுற்றுவட்டார கிராமங்களில் இருக்கின்ற சுமார் 10,000 ஏக்கர்க்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த சில வருடங்களாக கோடை மழை பெய்யவில்லை என்பதால் மார்க்கண்டேயன் நதி தண்ணீரில்லாமல் வறண்டு போனது. இந்நிலையில் தற்சமயம் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் பெய்து வரும் கன மழையினால் கர்நாடக மாநிலத்தில் உள்ள காமசமுத்திரம் அணை மற்றும் தமிழக எல்லையில் இருக்கின்ற சிலுகலப்பள்ளி அணை நிரம்பி வழிந்தது.

இந்த அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீர் நேற்று மார்க்கண்டேயன் நதிக்கு வந்துள்ளது. இதை பார்த்து ஆனந்தம் அடைந்த பொதுமக்கள் மார்க்கண்டேயன் நதி, நாச்சிக்குப்பம் குப்தா ஆறு, யானைகால் தொட்டி மேம்பாலத்தில் பெருக்கெடுத்து வந்த நீரை பூஜை செய்து மலர் தூவி வரவேற்று உள்ளனர். மேலும் பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகள், பேருந்து பயணிகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிபடுத்தினார்கள்.

Categories

Tech |