Categories
தேசிய செய்திகள்

கர்நாடக அமைச்சருக்கு கொரோனா தொற்று… அமைச்சர் வீட்டில் பணிபுரிந்த ஐந்து பேருக்கும் பாதிப்பு…!!

கர்நாடகா அமைச்சருக்கு கொரோனா கண்டறியப்பட்டதை அடுத்து, அவர் வீட்டில் பணிபுரிந்த 5 ஊழியர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநில வேளாண்மைத் துறை அமைச்சராக இருப்பவர் பிசி பாட்டீல்.  கொரோனா பரிசோதனைக்குப் பின் அமைச்சருக்கு அறிகுறிகள் இருந்தன. அதனால் பெங்களூருவில் உள்ள தன் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திகொண்டார். அதன்பின் அவரின் மருத்துவ அறிக்கை வெளியானதில் கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியானது. மேலும் அவரின் வீட்டில் பணிபுரிந்த ஊழியர்கள் ஐந்து பேருக்கும் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனை பிசி பாட்டீல் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் ட்விட்டரில் கூறுகையில், “மருத்துவ அறிக்கையில் எனக்கு கொரோனா பாதிப்பிருப்பது தெரியவந்துள்ளது. நான் என் வீட்டில் தனிமையில் உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் வெள்ளிக்கிழமை 5,483 பேருக்கு  புதிதாக பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. உயிரிழப்பு 84 ஆக பதிவாகியிருந்தது. மாநிலத்தில் மொத்தம் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 115 பேர் கொரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு, இதில் 49,788 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 72,005 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மாநிலத்தில் மொத்த உயிரிழப்பு இரண்டு ஆயிரத்து 134 ஆக இருக்கிறது.

Categories

Tech |