Categories
தேசிய செய்திகள்

கர்நாடக அமைச்சர் திடீர் ராஜினாமா…. அரசியலில் பெரும் பரபரப்பு….!!!!

கர்நாடக ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ஈஸ்வரப்பா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அரசு வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்துவதற்கு 40 சதவிகிதம் கமிஷன் கேட்டதாக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா மீது குற்றம்சாட்டியிருந்த அரசு சிவில் ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல், தங்கும் விடுதியில் மர்மமான முறையில் இறந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் இறப்பதற்கு முன் தனது நண்பர்களுக்கு அனுப்பிய வாட்ஸ் அப் மெசேஜில், தன் இறப்புக்கு அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா தான் காரணம் என குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக, அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், அவரை பதவிநீக்கம் செய்யக் கோரி, ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிடம் காங்கிரஸ் தலைவர்கள் புகார் மனு அளித்தனர். மேலும், முதல்வர் பசவராஜ் பொம்மை இல்லத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, சிவமொக்காவில் வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா, தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும், ராஜினாமா கடிதத்தை பெங்களூரில் வெள்ளிக்கிழமை முதல்வர் பசவராஜ் பொம்மையை சந்தித்து தரவிருப்பதாகவும் கூறினார்.  இந்த நிலையில் அமைச்சர் ஈஸ்வரப்பா தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் ராஜினாமா  கடிதத்தை அவர் அளித்தார்.

Categories

Tech |