கர்நாடகாவில் கெம்பண்ணா என்பவர் ஒப்பந்த கூட்டமைப்பு தலைவராக இருந்து வருகிறார். இவர் தோட்டத்துறை மந்திரி முனிரத்னா மீது சமீபத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அதாவது பா.ஜ.க ஆளும் கர்நாடக அரசு 40 சதவீதம் லஞ்சப்பனம் பெற்றுள்ளது என்ற குற்றச்சாட்டை முன் வைத்தது மட்டுமல்லாமல் இது குறித்து பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதியுள்ளார். மேலும் அதிக அளவிலான ஊழலால் உள்ளூர் ஒப்பந்ததாரர்களால் எந்த பணியும் பெற முடியவில்லை எனவும் பிற மாநிலங்களை சேர்ந்த நபர்களே பணியை பெறுகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அரசு அதிகாரிகளுக்கு எதிராக பல ஒப்பந்ததாரர்கள் இதைப் போன்ற ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.
இதன் காரணமாக ஒரு மாத கட்டிடப் பணி நிறுத்தம் செய்யப்படும் என மிரட்டல் விடுத்து பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என கர்நாடக ஒப்பந்ததாரர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. மேலும் அவர்களின் பல்வேறு கோரிக்கைகள் ஏற்கப்படும் என அரசு உறுதி கூறியதை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இருப்பினும் கொம்பண்ணா கூறிய குற்றச்சாட்டை தொடர்ந்து மந்திரி முனிரத்னா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கில் கொம்பண்ணா நேரில் ஆஜராகும் படி உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் அவர் நேரில் ஆஜராகாமல் இருந்து வந்த காரணத்தினால் தற்போது அவரை கைது செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து கோர்ட் உத்தரவின் பெயரில் கொம்பண்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர்.