Categories
தேனி மாவட்ட செய்திகள்

கர்னல் ஜான் பென்னிகுவிக் 181-வது பிறந்தநாள்…. புதர்மண்டி கிடக்கும் மணிமண்டபம்…. அதிருப்தியில் சுற்றுலாவினர்….!!

கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் மணிமண்டபம் புதர் மண்டி காணப்பட்ட சம்பவம் சுற்றுலா பயணிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் முல்லை பெரியாறு அணையை கர்னல் ஜான் பென்னிகுயிக்கை நினைவு கூறும் வகையில் தமிழக அரசு சார்பில் லோயர்கேம்ப்பில் அவருக்கு நினைவு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபத்தை பார்ப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். இந்நிலையில் வருகின்ற 15ஆம் தேதி கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் 181 வது பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடபட உள்ளது.

இதனால் மணிமண்டபத்திற்கு வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் பென்னிகுவிக்கின் முழு உருவ வெண்கல சிலைக்கு இதுவரையிலும் வர்ணம் பூசும் பணி நடைபெறவில்லை. மேலும் மணிமண்டபத்தை சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே மணிமண்டபத்தை சுற்றிலுமுள்ள புதர்களை அகற்ற வேண்டும், ஜான் பென்னிகுவிக் சிலைக்கு வர்ணம் பூச வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |