கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் 111-வது நினைவு தினத்தையொட்டி அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு விவசாயிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள முல்லை பெரியாறு அணை தேனி, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை ஆகிய 5 மாட்டங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இப்படிப்பட்ட அணையை கட்டிய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் நினைவு தினம் ஆண்டு தோறும் லோயர்கேம்பில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் அனுசரிக்கப்படுவது வழக்கம்.
அதன் படி 111-வது நினைவு தினம் நேற்று அனுசரிப்பட்டுள்ளது. அப்போது மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு விவசாயிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் பாரதீய கிசான் சங்கம் தேனி மாவட்ட தலைவர் சதீஷ்பாபு, 5 மாவட்ட விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பொன் காட்சி கண்ணன், கூடலூர் முல்லைசாரல் விவசாயிகள் சங்க தலைவர் கொடியரசன் மற்றும் விவசாயிகள் பலரும் பங்கேற்றுள்ளனர்.