Categories
உலக செய்திகள்

கர்ப்பத்தில் மீண்டும் ஒரு கர்ப்பம்…. 6 நிமிட இடைவெளியில் நடந்த…. அதிசய நிகழ்வு….!!!!

அமெரிக்காவைச் சேர்ந்த காரா வின்ஹோல்ட் என்ற பெண் ஏற்கனவே கர்ப்பமாக இருந்துள்ளார். இதனிடையில் கர்ப்பமாக இருந்ததையடுது மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார். ஏற்கனவே இவர் இதற்கு முன்பாக மூன்று முறை கருக்கலைப்பு செய்துள்ளார். இதனையடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த பெண் கர்ப்பமான நிலையில் ஒரு மாதம் கழித்து நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர் மீண்டும் கர்ப்பமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவருடைய மகிழ்ச்சி இரட்டிப்பாகியுள்ளது.

இந்த தனித்துவமான மருத்துவ நிலை சூப்பர் பீடேசன் என்று அழைக்கப்படுகிறது. இது முதல் சில நாட்கள் அல்லது வாரங்களுக்குள் நிகழும் என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்து கடைசியில் பிரசவ நேரத்தில் அந்த பெண்ணுக்கு 6 நிமிட வித்தியாசத்தில் இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளன. இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், என்னுடைய கர்ப்ப காலத்தில் நடந்த அனைத்தும் ஒரு அதிசயம் என்று நான் 100% நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |