17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து தாயாக்கிய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருவெண்ணைநல்லூர் பகுதியில் இருக்கும் சித்தலிங்க மடத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருக்கிறார். இவருக்கும் தொழிலாளியான விக்னேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இவர் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதன் காரணமாக சிறுமி தற்போது 9 மாத கர்ப்பமாக இருக்கிறார். எனவே சிறுமி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு விக்னேஷிடம் பலமுறை கேட்டுள்ளார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாணவி விழுப்புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விக்னேஷை சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.