Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“கர்ப்பமாக இருக்கும் நமீதா”… போட்டோவுடன் இன்ஸ்டாவில் பதிவு… குஷ்பு வாழ்த்து…!!!!

நடிகை நமீதா கர்ப்பமாக இருக்கும் செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பிரபல நடிகையாக வலம் வரும் நமீதா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் தமிழில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் சென்ற 2017 ஆம் வருடம் வீரேந்திர சவுத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் 41 வயதாகும் நமீதா தற்போது கர்ப்பமாக இருக்கும் செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது, தாய்மை இந்த புதிய அத்தியாயம் தொடங்கியதும் நான் மாறினேன். என்னுள் ஏதோ மாறியது. மிகவும் மென்மையாக… பிரகாசமான மஞ்சள் சூரியனின் மீது பிரகாசிக்கும் போது புதிய வாழ்க்கை, புதிய தொடக்கம் என்னை அழைக்கின்றது. நான் விரும்பியது எல்லாம் நீதான். உனக்காக இவ்வளவு நாள் பிரார்த்தனை செய்தேன். உன் மென்மையான உதைகள் மற்றும் உன் படபடப்புகள் என அனைத்தையும் என்னால் உணர முடிகின்றது. நான் இதுவரை இல்லாத ஒன்றை நீ என்னை உருவாக்குகிறாய். ஆனால் நான் எப்போதும் இருப்பதை விட அதிகமாக நமிதா… என அதில் தெரிவித்துள்ளார். இவரின் இந்த பதிவை பார்த்த குஷ்பு தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

Categories

Tech |