Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கர்ப்பமாக இருக்கும் பெண்களே… “குங்குமப்பூவை அதிகமாக சாப்பிடாதீங்க”…. கருச்சிதைவு கூட ஏற்படுமாம்..!!

குங்குமப் பூவை சாப்பிட்டு வந்தால் கருவில் இருக்கும் குழந்தை வெள்ளையாக பிறக்கும் என்று பலர் நம்பிக் கொண்டிருக்கின்றனர். அதுகுறித்து இந்த தொகுப்பில் நாம் பார்ப்போம்.

குங்குமப்பூ என்பது சுவைக்காகவும் நிறத்திற்கும் நம் உணவில் சேர்க்கப்படும் ஒரு பொருள். இதற்கு சாஃப்ரான் கேசர் என பல பெயர் உண்டு. இது உணவில் நிறத்தை தூண்டுவதற்கும், சுவைக்காகவும் பயன்படுத்தும் ஒரு பொருள். ஆனால் கர்ப்பிணிப் பெண்கள் குங்குமப்பூ சாப்பிட்டு வந்தால் குழந்தை வெள்ளையாக பிறக்கும் என்று நம்பி காலம் காலமாக பயன்படுத்தி வருகின்றனர். உண்மையில் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை வெள்ளையாக பிறக்குமா? என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

குங்குமப்பூ சாப்பிடுவதால் குழந்தை வெள்ளையாக பிறக்காது.  நம் கருவில் இருக்கும் குழந்தையின் நிறம் நமது ஹார்மோன்களின் காரணமாக ஏற்படக்கூடியது. கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிடுவது நல்லதுதான். ஆனால் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது அது உயிருக்கே கூட ஆபத்தாக அமையும் .நாள் ஒன்றுக்கு 10 கிராம் குங்குமப்பூவுக்கு மேல் சாப்பிட கூடாது. நாம் அப்படி செய்யும் போது கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு கூட உண்டு. இதனால் குங்கும பூ சாப்பிட்டால் குழந்தை வெள்ளையாக பிறக்கும் என்று நினைத்து அதிக அளவில் அதனை சாப்பிடாதீர்கள். அதற்கு பதிலாக பழங்கள் காய்கறிகள் அதிகமாக சாப்பிட்டால் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும்.

Categories

Tech |