Categories
சினிமா தமிழ் சினிமா

“கர்ப்பமாக இருக்கேன்” தெரிந்தும்…. அடித்து மிதித்து கொடுமைப்படுத்துகிறார்…. சீரியல் நடிகை பரபரப்பு புகார்….!!!

நடிகை திவ்யா  பெங்களூரில் பிறந்து வளர்ந்த இவர் பல்லக்கி என்னும் கன்னட படத்தில் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கினார். இதனை அடுத்து தமிழில் கேளடி கண்மணி என்னும் சீரியல் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆனார். பின் சன் டிவியில் ஒளிபரப்பான மகராசி சீரியலில் நடித்திருந்த திவ்யா தற்போது அந்த சேனலில் ஒளிபரப்பாகும் செவ்வந்தி என்ற சீரியலில் நடித்திருக்கிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 5 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இதனையடுத்து தான் நடித்த கேளடி கண்மணி சீரியலில் தன்னோடு நடித்த நடிகர் அர்னாவ் அம்ஜாத்தை திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்தார். இந்நிலையில் தன்னுடைய கணவர் அர்னாவ் செல்லம்மா சீரியலில் நடித்துவரும் நடிகையுடன் நெருக்கமாக இருப்பதால் அவருடன் ஏற்பட்ட நெருக்கத்தால் என்னை சந்திப்பதில்லை. என்னை பிளாக் செய்துவிட்டார் அத்துடன் செல்லம்மா சீரியல் நடிகையும் தன்னை டார்ச்சர் செய்து வருகிறார் என்று பரபரப்பு புகாரை முன் வைத்துள்ளார். மேலும் தான் கர்ப்பமாக இருப்பது தெரிந்தும் அவர் தொடர்ந்து என்னை டார்ச்சர் செய்கிறார். என்னை அடித்து மிதித்து கொடுமைப்படுத்துகிறார். இதை எல்லாம் செல்லமா சீரியல் ஹீரோயின் பார்த்து ரசிக்கிறார் என்று கூறியுள்ளார். இது தமிழ் சின்னத்திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |