ஒரு ஆண் கர்ப்பமாக இருந்தார் என்றால் உங்களால் நம்ப முடியுமா? அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. இதுபற்றி இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.
உலகில் பெண்கள் தான் கர்ப்பம் தரித்து குழந்தைகளை பெற்றெடுப்பர். ஆனால் ஒரு ஆண் கர்ப்பமாக இருந்தார் என்று சொன்னால் நம்ப முடியுமா? ஆம் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. இந்தியாவில் உள்ள நாக்பூரில் வசிக்கும் 36 வயதுடைய சஞ்சீவ் என்ற விவசாயிக்கு சிறு வயதிலிருந்தே வயிறு மிகவும் பெரிதாக இருந்துள்ளது. ஒருநாள் சஞ்சீவ்க்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இவர் வலி தாங்க முடியாமல் பயங்கரமாக துடித்துள்ளார். இதனால் சஞ்சீவ் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு சஞ்சீவை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றில் கட்டி இருப்பதாக கூறி உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். அதன்படி சஞ்சீவ் ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அவருக்கு ஆப்பரேஷன் செய்யும் போது வயிற்றில் கட்டிக்கு பதிலாக ஒரு வளர்ச்சி இல்லாத கை, கால், தலை முடி, சிறிய அளவிலான தசை இருந்துள்ளது. இது சஞ்சீவ் வயிற்றில் எப்படி வந்தது என்று மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர். அந்த ஆராய்ச்சியின் போது சஞ்சீவ் அவருடைய தாயின் வயிற்றில் கருவாக இருக்கும் போது இரட்டை குழந்தைகள் இருந்துள்ளது. இதில் ஒரு குழந்தை தாயின் வயிற்றில் வளராமல் சஞ்சீவி வயிற்றுக்குள் வளர்ந்துள்ளது. இதனால் போதுமான அளவு ஆக்சிஜன் மற்றும் சத்துக்கள் கிடைக்காமல் குழந்தை முழுமையாக வளர்ச்சி அடையாமல் கை, கால் என தனித்தனி பிண்டங்களாக இருந்துள்ளது. இதன் காரணமாகத்தான் சஞ்சீவ்க்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. மேலும் மருத்துவர்கள் வயிற்றில் இருந்த பிண்டங்களை அகற்றிய பிறகு சஞ்சீவ் நலமாக இருக்கிறார்.