கர்ப்பிணி பெண் ஒருவர் 10 நாட்களில் மீண்டும் கர்ப்பமாகியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறப்பர் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில் பத்து நாட்கள் கடந்த பின்னர் அவர் மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். அதாவது ஒரே சமயத்தில் மூன்று குழந்தைகளுக்கு தாயாக போகிறார் என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த பெண் சமூக ஊடகத்தில் தன் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, மருத்துவர்கள் தனக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைக்கு superfetation என்று கூறியுள்ளனர்.
அதாவது ஒரு முறை கர்ப்பமான பின்பு உடலில் சில மாறுதல்கள் ஏற்படுமாம். ஆனால் தனக்கு அந்த மாறுதல்கள் ஏற்படவில்லை என்று கூறியுள்ளார். மேலும் உலகில் வசிக்கும் பெண்களில் 10 சதவீதம் பேருக்கு இருமுறை கருமுட்டை வெளியாகும். மேலும் 3 சதவீதம் பெண்களுக்கு ஒரே சமயத்தில் இரண்டு முறை கருவுறும் நிலை ஏற்படும் என்று மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர். மேலும் இப்பெண்ணுக்கு ஒரே நாளில் பிரசவம் நடக்கும் என்று கூறப்பட்டுள்ளதால் வெவ்வேறு நாட்களில் கருவுற்று இருந்தாலும் ஒரே பிரசவத்தில் மூவர் பிறக்க இருக்கின்றனர் என்றும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.