நடிகை ஸ்ரேயா சரண் தமிழ்,தெலுங்கு ஆகிய மொழிகளில் பல்வேறு முன்னணியான நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஸ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் Andrei Koscheev என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது அந்த தம்பதியினருக்கு ராதா என்ற பெண்குழந்தை இருக்கிறது. இதற்கிடையில் ஸ்ரேயா தான் கர்ப்பமாக இருந்தது குறித்து வெளியில் அறிவிக்கவில்லை.
பிறகு திடீரென்று ஒருநாள் தனக்கு பெண் குழந்தை இருக்கிறது. அந்த குழந்தைக்கு ராதா என பெயர் சூட்டியிருக்கிறோம் என அறிவித்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இந்நிலையில் ஸ்ரேயா தான் கர்ப்பமாக இருந்ததை மறைப்பதற்கு என்ன காரணம் என கூறியிருக்கிறார். அதாவது, “நான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தால் பிறகு மீண்டும் சினிமாவுக்கு வர நீண்டகாலம் ஆகும். யாரும் உடனடியாக வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள்” என அவர் கூறினார்.