இத்தாலியில் தன்னை விட 11 வயது குறைந்த பெண்ணை கர்பமாக்கி கொலை செய்த வழக்கிற்கு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் கடானியா என்ற நகரத்தில் உள்ள நிகோலா மன்குசோ(30) என்பவருக்கு சில ஆண்டுகள் முன்பு திருமணமாகி குழந்தை உள்ளது. இதில் கடந்த 2010 ஆம் ஆண்டில் வெலண்டினா என்ற 19 வயதான பெண்ணை திருமணமானதை மறைத்து காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்களின் தொடர்பை கண்டறிந்த நிகோலாவின் மனைவி வெலண்டினாவுடனான தொடர்பை விட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து வெலண்டினா நான் கர்பமாக இருக்கிறேன் என நிகோலாவிடம் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த நிகோலா அந்த பெண்ணை கொலை செய்து அதனை தற்கொலை என அனைவரிடம் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து போலீசாரின் தீவிர விசாரணையில் வெலண்டினாவை நிகோலா தான் கொலை செய்துள்ளார் என உறுதியாகி அவரை உடனடியாக கைது செய்துள்ளனர். பின்னர் இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுள்ளது. நீண்ட ஆண்டுகளுக்கு பின் இந்த வழக்கிற்கான தீர்ப்பு நேற்று வழங்கியுள்ளது. அதில் நிகோலாவிற்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.