வேலூரில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையத்தில் 38 வயதுடைய மணிமாறன் என்பவர் வசித்துவருகிறார். அவர் தனது உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று அங்கிருந்த 15 வயதுடைய ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியை வற்புறுத்தி, தாக்கி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பிறகு இதுபற்றி வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவேன் என்று அந்த மாணவியை மிரட்டி உள்ளார். இதனையடுத்து மாணவி கர்ப்பம் ஆனார்.
இதுபற்றி மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்ததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பிறகு தனது மகளிடம் விசாரித்த போது நடந்த உண்மையை அவர் கூறியுள்ளார். இதுபற்றி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை சீரழித்த மணிமாரணை கைது செய்துள்ளனர்.