Categories
கிரிக்கெட் விளையாட்டு

கர்ப்பமாய் இருந்து இப்படி பண்றாங்களே… அனுஷ்கா சர்மாவின்… வைரல் புகைப்படம்..!!

கேப்டன் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மா தற்போது யோகாசனம் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மா.இவர்  தற்போது கர்ப்பமாக உள்ளார். அந்த சமயத்திலும் அவர் சிரசாசனம் எனும் தலைகீழாக நிற்கின்ற சிக்கலான யோகாசனத்தை செய்துள்ளார்.  இந்தப்புகைப்படத்தை அனுஷ்கா ஷர்மா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் அனைவரையும் ஆச்சிரியத்தில் மூழ்க செய்தது.

மருத்துவரின் பரிந்துரை பெயரிலும், யோகா மாஸ்டரின் கண்காணிப்பின் கீழும் இந்த பயிற்சியை செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக யோகாசனம் எப்போதும் இருந்ததாகக் கூறும் அவர், கர்ப்ப காலத்திலும் அவற்றை செய்ய முடிவது சிறந்த வாய்ப்பு என்று கூறியுள்ளார். இந்த ஆசனத்தை தனது கணவர் விராட் கோலியின் துணையுடன் செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |