கர்ப்ப காலத்தில் உடம்பில் ஏற்படும் மாற்றங்கள் என்னவென்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:
கர்ப்ப காலத்தில், ஹார்மோன் மாற்றங்களால் கொழுப்பு கட்டிகள் வருவது, ஹார்மோன் அதிகம் சுரப்பதால் சீபம் என்கிற எண்ணெய் பசை சுரப்பிகள் தூண்டப்பட்டு எண்ணெய் பசையும் அதிகரிக்கும்.
அனைவருடைய சருமமும் ஒரே மாதிரியான தன்மை கொண்டது அல்ல, எனவே கர்ப்ப காலத்தில் பருக்கள் வரும் என்று அர்த்தமில்லை. காலத்தில் திடீரென கிளம்பும் பருக்கள் தற்காலிகமானவையே, வந்த வேகத்தில் மறைந்து விடும் என்பதால் கவலை வேண்டாம்.
கர்ப்ப காலத்தில் ஹார்மோன் சுரப்பும் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் வழக்கத்தைவிட கர்ப்பிணிகளின் முகத்தில் அழகு கூடும். அதேநேரம் சருமத்தில் நீர்ச்சத்து குறைவதால் ஒருவித வறட்சி ஏற்படும்.
கர்ப்பமாக இருக்கும் நாட்களில் கெமிக்கல் கலந்த அழகு சாதனங்களை உபயோகிப்பதைத் தவிர்ப்பது நல்லது. சருமத்திற்கு, பாலாடை தடவுவது போன்ற பாதிப்பில்லாத இயற்கை வழிகளைப் பின்பற்றலாம்.
கர்ப்ப காலம் முடிந்ததும் சருமம் இயல்பாக மாறிவிடும். கர்ப்ப காலத்தில் கூந்தலுக்கு கலரிங் செய்வது கூடாது இந்த நாட்களில் பிரஜன் ஹார்மோனின் அளவு அதிகரிப்பதால் கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக தெரியும்.
ஹேர் டை, கலரிங் பொருள்களில் ரசாயன கலப்பு அதிகம் இருபதால், அவை கருவில் உள்ள குழந்தைகளை பாதிக்கலாம்.
வளரும் நிலையில் உள்ள முடிகள், ஹார்மோன்களின் தூண்டுதல் காரணமாக வேகமாகவும் அடர்த்தியாகவும் வளரும், அதே சமயம் முடி உதிர்வு அதிகமாகவும் இருக்கலாம். இந்த இரண்டுமே தற்காலிகமானவை என்பதால் பயப்பட வேண்டாம்.