தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் தற்போது கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் தனது கட்டத்திலிருக்கும் மற்றவர்களுக்கு உதவும் விதமாக இன்ஸ்டாகிராமில் முக்கிய ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் தற்போது கர்ப்பமாகவுள்ளார். இந்நிலையில் இவர் கர்ப்பகாலத்திலிருக்கும் மற்றவர்களுக்கு உதவும் விதமாக இன்ஸ்டாவில் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி ஒரு பெண்ணுக்கு கர்ப்பகாலத்தில் வருகின்ற மன அழுத்தம், உடல் சோர்வு, உடல் பருமன் போன்ற பல பிரச்சினைகள் குறித்து கர்ப்பிணிகள் எவரும் கவலைப்பட வேண்டாம் என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி நேர்மையான வழிகளில் தங்களது கவனத்தை செலுத்துங்கள் என்றும், குழந்தை வளர வளர உங்களது உணர்வுகளை தாராளமாக வெளிப்படுத்தலாம் என்றும் கர்ப்பிணிகளுக்கு காஜல் அகர்வால் ஆலோசனை வழங்கியுள்ளார்.