Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு விலக்கு…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு குறைந்த பாடில்லை. அதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பலத்த  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு பணியில் இருந்து விலக்கு அளிக்கபடுவதாக டீன் செல்வ நாயகம் அறிவித்துள்ளார். மதுரையில் கர்ப்பிணி மருத்துவர் சண்முகப்பிரியா கொரோனா பாதிப்பால் உயிரிழந்த நிலையில், இதுபோன்ற மரணத்தை தவிர்க்க கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பணியில் விலக்கு அளிக்க ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |