Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கர்ப்பிணிப் பெண் மீது கொடூர தாக்குதல்…. இணையத்தில் வைரல் வீடியோ….. குமரியில் பரபரப்பு….!!!

கர்ப்பிணி பெண் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவிதாங்கோடு அருகே கேரளபுரம் பகுதியில் கில்பர்ட் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய பக்கத்து வீட்டில் வசிக்கும் ஏஞ்சல் சகாரின் என்பவருக்கும், கில்பர்ட் ராஜனுக்கும் வழிப்பாதை சம்மந்தமாக முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தன்னுடைய வீட்டின் முன்பாக கில்பர்ட் ராஜன் நின்று கொண்டிருந்தார். அப்போது ஏஞ்சல் சகாரின் மற்றும் அவருடைய சகோதரர் பிராங்க்ளின் இருவரும் கில்பர்ட் ராஜனை கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர்.

இதை தடுக்க வந்த கில்பர்ட் ராஜனின் 7 மாத கர்ப்பிணி மனைவி பிரதீஷா டேனி மற்றும் தாயார் ஸ்டெல்லா மேரி, சகோதரர் கிறிஸ்டோபர் ஆகிய 3 பேரையும் சரமாரியாக இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பத்மநாதபுரம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் தக்கலை காவல்துறையினர் ஏஞ்சல் சகாரின், பிராங்க்ளின்‌, கில்பர்ட் ராஜன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். மேலும் கில்பர்ட் ராஜன் மற்றும் அவருடைய கர்ப்பிணி மனைவி தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Categories

Tech |