கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தை கொரோனா தொற்றினால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் நாட்டில் நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோன தொற்று ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்கள் அப்பெண்ணை பரிசோதித்ததில் வயிற்றில் இருந்த குழந்தை இறந்து போனதாக கூறியுள்ளனர். பின்னர் அந்த குழந்தையை வெளியில் எடுத்து அந்த குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் நோய் தொற்று அக்குழந்தைக்கும் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.
கொரோனா தொற்றால்தான் குழந்தை இறந்திருக்க கூடும் என்று தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. இஸ்ரேலில் ஏற்கனவே இதுபோன்று வயிற்றில் இருந்த குழந்தை கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில் தற்போது இரண்டாவதாக ஒரு குழந்தை இறந்தது நாட்டு மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.