Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கர்ப்பிணியை கவனிக்க வந்த தந்தை…. கத்தியால் குத்திய கல்லூரி மாணவர்…. போலீஸ் விசாரணை…!!

முதியவரை கத்தியால் குத்திய கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆதனக்கோட்டை பகுதியில் செல்லதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா(35) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் இருக்கின்றனர். தற்போது சசிகலா 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் சசிகலாவுக்கும் அதே பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக சசிகலாவை கவனிப்பதற்காக அவரது தந்தை சண்முகம் வீட்டில் தங்கி இருந்துள்ளார்.

இதனை அடுத்து அந்த மாணவருக்கு சசிகலாவுடன் பேச இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த மாணவர் சண்முகத்தை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். பின்னர் காயமடைந்த முதியவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய கல்லூரி மாணவரை கைது செய்தனர்.

Categories

Tech |