Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கர்ப்பிணி என்றும் பாராமல்….. பட்டப்பகலில் சென்னையில் பயங்கரம்…. பதைபதைக்க வைக்கும் வீடியோ …!!

சென்னை பல்லாவரத்தில் பட்டப்பகலில் வீட்டு வாசலில் கர்ப்பிணிப் பெண்ணை கீழே தள்ளிவிட்டு செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜமீன் பல்லாவரம் ரேணுகா நகரை சேர்ந்த கீதா என்பவர் தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவர் இரு தினங்களுக்கு முன் தன் வீட்டு வாசலில் நின்று கொண்டு இருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரில் ஒருவன் கீதாவின் கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றான். ஆனால் கீதா தாலி செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டதால் நிறைமாத கர்ப்பிணியான கீதாவை கீழே தள்ளிவிட்டு  செயினை பறிக்க முயன்றுள்ளான்.

கீதாவின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததால் ஜெயின் பறிப்பு  கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த செயின் பறிப்பு சம்பவத்தின் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Categories

Tech |