உத்தரபிரதேச மாநிலம் பரேலி என்ற பகுதியில் கர்ப்பிணி பெண் கொலை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பரேலி என்ற நகரில் வசித்து வரும் வினிதா என்கின்ற கர்ப்பிணி பெண் தனது கணவர், 6 வயது மகள் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அப்பெண்ணின் கணவர் வெளியூர் சென்றுவிட்டார். மாமியார் ஒரு செவிலியர், அவர் இரவு பணிக்காக அன்று இரவு மருத்துவமனைக்கு சென்று விட்டார். வீட்டில் கர்ப்பிணியான வினிதாவும் அவரது 6 வயது மகளும் மட்டும் தனியாக இருந்துள்ளனர். காலையில் வினிதாவின் மாமியார் வீட்டிற்கு வந்து பார்த்தபோது அவர் ரத்த வெள்ளத்தில் வினிதா இறந்து கிடந்தார். அவரது அருகே அவரது மகள் செய்வதறியாமல் அமர்ந்திருந்தார்.
இச்சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சம்பவம் நடந்த பொழுது வினிதாவின் மகள் மட்டுமே அங்கு இருந்த காரணத்தினால் காவல்துறையினர் குழந்தையிடம் பேசி தகவல்களை சேகரித்தனர். அதன்படி அன்று இரவு வினிதாவின் உறவினர்கள் ஆகாஷ் குமார் என்பவர் வீட்டிற்கு வினிதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக குழந்தை தெரிவித்தது. இதையடுத்து தப்பி ஓடிய ஆகாஷ் குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.