Categories
தேசிய செய்திகள்

கர்ப்பிணி தற்கொலை…..!! பெண் குழந்தை பிறந்து விடுமோ என்ற பயம்…!! வயிற்றில் இருந்தது என்ன குழந்தை தெரியுமா…?

பெண் குழந்தை பிறந்து விடுமோ என்ற பயத்தில் கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் மன்செரியால் நகரில் உள்ள என்.டி.ஆர். நகர் காலனியில் வசித்து வந்தவர் ரம்யா( வயது 26 ). இவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ரம்யா 2-வது முறையாக கர்ப்பம் தரித்தார். 9 மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு ஜனவரி முதல் வாரம் குழந்தை பிறக்கும் என்று டாக்டர்கள் கூறி இருந்தனர்.ரம்யாவுக்கு ஆண் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற விரும்பம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

எனவே 2-வதாக மீண்டும் பெண் குழந்தை பிறந்துவிடக்கூடாது என்று தனது கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் அடிக்கடி கூறி வந்துள்ளார் ரம்யா. அதற்கு அவருடைய குடும்பத்தினர் எந்த குழந்தை பிறந்தாலும் பரவாயில்லை. பெண் குழந்தை பிறந்தால் நல்லது தான் என்று கூறி வந்தனர். என்றாலும் பெண் குழந்தை பிறந்துவிடுமோ என்ற பயம் ரம்யாவுக்கு இருந்து வந்துள்ளது. இதனை தொடர்ந்து பயம் அதிகரித்ததால் கடந்த 5-ம் தேதி அவர்வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது அவரது குடும்பத்தினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசார் அவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.பிரேத பரிசோதனையில் அவரது வயிற்றில் ஆண் குழந்தை இருப்பது தெரியவந்தது. இதை உணராமல் ரம்யா தற்கொலை செய்து கொண்டது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் தள்ளியுள்ளது.
மேலும் ரம்யா தற்கொலை செய்யும் முன்பு தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என விரிவாக கடிதம் எழுதி வைத்துள்ளார். இதனால் போலீசார் அவரது குடும்பத்தினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Categories

Tech |