கர்ப்பிணி பெண்கள் தைராய்டு பரிசோதனை செய்துகொள்ளும்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
உலகில் உள்ள ஒவ்வொரு பெண்களுக்கும் தாய்மை என்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும். அவ்வாறு கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மிகுந்த கவனத்துடன் இருப்பது மிகவும் அவசியம். அவர்களை தங்கள் வீட்டில் உள்ளவர்கள் தான் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் நல்ல ஊட்டச்சத்து உணவுகளையும் மகிழ்ச்சியையும் அவர்களுக்கு நாம் கொடுப்பது அவசியம். அவ்வாறு கர்ப்பிணி பெண்கள் அனைவரும் ஒவ்வொரு மாதமும் மருத்துவமனை சென்று பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியம்.
அதன்படி கர்ப்பிணி பெண்களுக்கு செய்யப்படும் தைராய்டு ஹார்மோன் பரிசோதனையால், இல்லாத நோயை இருப்பதாக கருதுவதும், தேவையற்ற சிகிச்சையும் அளிக்கப்படுவதாகவும் கனடாவில் நடந்த ஆய்வில் கண்டறிந்துள்ளனர். தைராய்டு சோதனையில், ஹார்மோன் அளவில் சிறு மாற்றத்தையும் நோயாக கருதி சிகிச்சை அளிக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான இப்பிரச்சனை தானே சரியாகி விடுகிறது. உடல் நிலையை அறிய சோதனைகள் தேவைதான். ஆனால் முடிவுகளை அப்படியே எடுத்துக்கொண்டு பாதிப்பு இருப்பதாக கூறி விட முடியாது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் இனிமேல் தைராய்டு பரிசோதனை செய்து கொள்ளும் கர்ப்பிணி பெண்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.