Categories
மாநில செய்திகள்

கர்ப்பிணி பெண்களே….! இனி சுகப்பிரசவம் தான்…. அமைச்சர் செம ஹேப்பி நியூஸ்…!!!!

நவீன தொழில் நுட்பங்கள் வளர்ந்துவிட்டதால் வீடுகளில் அன்றாடம் செய்யும் துணி துவைப்பது, வீட்டை பெருக்குவது, மாவு அரைப்பது உள்ளிட்ட எல்லா வேலைகளும் இயந்திர மயமாகி விட்டன. இதனால் சரியான உடற்பயிற்சி இல்லாததால் கர்ப்பிணி பெண்கள் பெரும்பாலும் ஆபரேசன் மூலம் பிரசவிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட நேரிடுகிறது. எனவே கர்ப்பிணிகள் கர்ப்பம் அடைந்தது தெரிந்துமே யோகா பயிற்சி பெறலாம். இதன்மூலம் கர்ப்பகால பிரச்சினைகள் ஏற்படாது. பல பெண்கள் பிரசவ வேதனையை நினைத்து பயப்படுவதும் உண்டு. யோகா பயிற்சியின் மூலம் அந்த வலியும் அவர்களால் தாங்கும் அளவுக்கு இருக்கும் என்பது மருத்துவர்களின் கருத்து.

இந்நிலையில் மதுரையில் கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் நடப்பதற்காக யோகா பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சியினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர்,  இதேபோல் தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாய்-சேய் நல விடுதிகளில் இந்த பயிற்சி வழங்கப்படுவதாகவும், இதற்காக யோகா மற்றும் இயற்கை மருத்துவ பயிற்சியாளர்கள் அனைத்து மருத்துவமனைகளிலும் இருக்கிறார்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |