கர்ப்பிணி பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் இதையெல்லாம் சாப்பிட்டால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
உலகில் உள்ள ஒவ்வொரு பெண்களுக்கும் கர்ப்பம் என்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும். அவ்வாறு கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மிகுந்த கவனத்துடன் இருப்பது மிகவும் அவசியம். அவர்களை தங்கள் வீட்டில் உள்ளவர்கள் தான் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் நல்ல ஊட்டச்சத்து உணவுகளையும் மகிழ்ச்சியையும் அவர்களுக்கு நாம் கொடுப்பது அவசியம். அவ்வாறு கர்ப்பிணி பெண்கள் அனைவரும் ஒவ்வொரு மாதமும் மருத்துவமனை சென்று பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியம்.
அதிலும் குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் சில உள்ளன. அதன்படி, அதிகமாக டீ மற்றும் காபி குடிக்கக் கூடாது. அதிக மசாலா மற்றும் எண்ணெய் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக பதப்படுத்தப்பட்டு டப்பாக்களில் உள்ள உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அசைவ உணவுகளை பாதி வேக்காட்டில் சமைத்து சாப்பிடக் கூடாது. குளிர்பானங்களை அதிகம் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இதையெல்லாம் தவிர்ப்பது உங்களுக்கு நல்லது.