Categories
உலக செய்திகள்

கர்ப்பிணி பெண்ணுக்கு கத்திக்குத்து…. வெளியான பகீர் உண்மை…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!!

அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாகாணம் பொர்ன்க்ஸ் பகுதியில் ஆஸ்கர் அல்வெஸ் (34) வசித்து வருகிறார். இவரும் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றிய லிவ் அப்ரு (34) என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து இருவரும் லிவ் -இன் முறையில் வாழ்ந்து வந்துள்ளனர். இதனிடையில் சென்ற 2018ஆம் வருடம் லிவ் அப்ரு கருவுற்றுள்ளார். ஆனால் லில் அப்ருவின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தந்தை தான் இல்லை என்றும் லிவ் அப்ரு வேறு நபருடன் உறவில் இருந்ததாலேயே கர்ப்பம் அடைந்ததாகவும் அவரது காதலன் ஆஸ்கர் அல்வெஸ் கூறியுள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் இடையில் அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்ற 2018 மார்ச் 21ஆம் தேதி இரவு 1 மணியளவில் இவ்விவகாரம் குறித்து ஆஸ்கர் அல்வெஸ் மற்றும் அவரது காதலி லிவ் அப்ரு இடையில் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வாக்குவாதம் முற்றியதால் தான் வைத்திருந்த கத்தியை கொண்டு 26 வார கர்ப்பிணியான தன் காதலி லிவ் அப்ருவை ஆஸ்கர் சரமாரியாக வயிற்றில் குத்தியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் லிவ் அப்ரு சரிந்து விழுந்தார். அதன்பின் அங்கிருந்து ஆஸ்கர் தப்பி ஓடிவிட்டார். பின் லிவ் அப்ருவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதற்கிடையில் கடும் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளானதால் லிவ் அப்ருவின் குழந்தை கருவிலேயே உயிரிழந்து விட்டது.

அதனை தொடர்ந்து காதலியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய ஆஸ்கரை, காவல்துறையினர் சம்பவம் நடந்த நாளில் அதிகாலையிலேயே கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பின் ஆஸ்கருடனான காதலை லில் அப்ரு முறித்துக் கொண்டார். அடுத்ததாக காதலியை கத்தியால் குத்தியவழக்கில் ஆஸ்கர் மீது நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் நேற்று வழங்கிய தீர்ப்பில் “கர்ப்பிணி காதலியை கத்தியால் குத்திய ஆஸ்கரின் குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதனால் ஆஸ்கருக்கு 14 வருடங்கள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இத்தீர்ப்பை தொடர்ந்து ஆஸ்கர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Categories

Tech |