35 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதியை பார்த்து குற்றவாளி தம்ப்ஸ் அப் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
லண்டனை சேர்ந்த ஆரோன் மற்றும் கெல்லி ஆகிய இருவரும் காதலித்து வந்த நிலையில் அவர்களிடையே ஏற்பட்ட தகராறில் கெல்லி ஆரோனை பிரிந்து சென்றார். பின்னர் தன்னுடன் அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவரை கெல்லி காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கெல்லி வயிற்றில் ஆரோன் குழந்தை வளர கெல்லியிடம் தன்னுடன் வந்து வாழும் படி கேட்டுக் கொண்டுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த கெல்லி தனது வயிற்றில் வளரும் ஆரோனின் குழந்தையை பத்திரமாக பெற்றுக் கொடுப்பதாக கூறியதோடு அவருடன் வாழ்வதற்கு விருப்பமில்லை என முடிவாக கூறிவிட்டார்.
இந்நிலையில் தனது புது காதலனுக்காக கெல்லி பரிசு வாங்கியது ஆரோனுக்கு தெரியவந்துள்ளது. இதனால் கோபம் கொண்ட கெல்லியின் வீட்டிற்கு சென்று கர்ப்பிணி என்றும் பாராமல் 21 முறை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதில் கெல்லி வயிற்றில் வளைந்த 8 மாத குழந்தையும் உயிரிழந்தது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஆரோன் மீதான வழக்கு தற்போது விசாரணைக்கு வந்த நிலையில் 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
ஆனால் இந்த தண்டனை குறித்து சிறிதும் கவலைப்படாத ஆரோன் நீதிபதியைப் பார்த்து Thumbs Up செய்து விட்டு சென்றார். இது கெல்லியின் குடும்பத்தினரிடையே மேலும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து கெல்லியின் சகோதரி குழந்தையை கொன்ற உனக்கு இது சாதாரணமானதாக தான் இருக்கும் என சத்தமிட்டுள்ளார். கெல்லியின் குடும்பமே நீதிமன்றத்தின் உள்ளே வைத்து கதறி அழுதது பார்ப்போரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.