Categories
தேசிய செய்திகள்

கர்ப்பிணி பெண்ணை நடுரோட்டில் தாக்கிய கிராம மக்கள்….. எதற்காக தெரியுமா?… பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!

ஆந்திர மாநில திருப்பதி அடுத்துள்ள பழைய வீராபுரம் கிராமத்தில் ஸ்ரீ ஹரி என்பவர் வசித்து வருகிறார். இவரும் வேறு பகுதியை சேர்ந்த லீலாவதி என்ற இளம் பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் காதல் விவகாரத்தை ரகசியமாகவை வைத்திருந்தனர். ஆனால் ஒரு நாள் இவர்களது காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரிய வந்தது. இருப்பினும் பிள்ளைகள் விருப்பத்தை நிறைவேற்றக்கூடிய வகையில் இவர்களது காதல் திருமணத்திற்கு இரு விட்டாரும் சம்மதம் தெரிவித்து திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்து தனது மாமியார் வீட்டில் காணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் லீலாவதி கர்ப்பமாக இருந்தார். அவர்கள் வீட்டில் லீலாவை கவனமாகவும், எச்சரிக்கையாகவும் பார்த்துக் கொண்டனர். இந்நிலையில் தனது பெற்றோர் வீட்டிற்கு செல்ல விரும்பிய லீலா இது குறித்து கணவரிடம் கூறினார். அதன் பிறகு கணவரும் லீலாவும் சேர்ந்து கிராமத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கே லீலா வந்ததை அறிந்த கிராமத்தினர் அவரது வீட்டை முற்றுகைத்தனர். வேறு சமூகத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்ட லீலாவை கண்டித்தனர். அதுமட்டுமில்லாமல் மாற்று சமூகத்தை சேர்ந்த ஒருவரை லீலா திருமணம் செய்து கொண்டதால் தங்கள் சமூகத்தின் விதிகளை மீறியதாகும். அதனால் லீலாவின் குடும்பம் 50 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் இதனை இரண்டு நாட்களுக்கு கட்ட வேண்டும் என்று உத்தரவிட்டர். ஆனால் லீலாவின் குடும்பம் வறுமையானது என்பதால், அவர்களால் அந்த தொகையை செலுத்த முடியாது. எனவே இது குறித்து கிராமத்தினரிடம் முறையிட்டனர். இருப்பின் அவர்களது பேச்சை கேட்காத கிராமத்தினலர்‌ லீலாவின் குடும்பத்தினரை வசைப்பாட்டியுள்ளனர். இதனால் அங்கே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் லீலா மற்றும் அவரது கணவரை அந்த ஊர் மக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். கர்ப்பிணி என்றும் பாராமல் நடுத்தெருவில் இழுத்து வந்து லீலாவை கொடுமையாக தாங்கியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே லீலாவின் கர்ப்பம் கலைந்து உள்ளது. இதனை அடுத்து லீயாவே மீட்டு அவரது உறவினர்கள் அவரை உடல்நலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Categories

Tech |