Categories
உலக செய்திகள்

கர்ப்பிணி பெண் கொடூரக்கொலை.. வயிற்றை கீறி குழந்தையை திருடிய பெண்.. பகீர் சம்பவம்..!!

பிரேசிலில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பிய ஒரு பெண் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை வெட்டி குழந்தையை எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரேசிலில் வசிக்கும் Pamella Ferreira Andred Martins(21) என்ற கர்ப்பிணி பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக்கிடந்தார். ஆனால் அவரின் வயிற்றில் குழந்தை இல்லை. காவல்துறையினர் அவரின் குழந்தையைத் தேடியுள்ளனர். அந்த சமயத்தில் அருகில் இருக்கும் ஒரு மருத்துவமனைக்கு 22 வயதுடைய பெண் ஒருவர் இறந்த குழந்தையுடன் வந்து தன் வீட்டில் தனியாக குழந்தையை பெற்றுக் கொண்டேன், என்றும் படியில் இறங்கி குழந்தையுடன் வந்தபோது வழுக்கி விழுந்துவிட்டேன் என்றும் கூறியிருக்கிறார்.

அதன்பின்பு மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்துள்ளனர். அதில் அவர் கர்ப்பிணி இல்லை என்று தெரிய வந்திருக்கிறது. இதனைத்தொடர்ந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணையில், அந்த இளம்பெண் கர்ப்பிணி போன்று நடித்து வந்தது தெரியவந்துள்ளது.

மேலும் Pamellaவுடன் சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள் அவர் இருந்துள்ளார் என்பதும் தெரிய வந்திருக்கிறது. இதனைத்தொடர்ந்து அந்த குழந்தைக்கு பிரேத பரிசோதனை செய்யப்படவுள்ளது. மேலும் இவர் குழந்தை மீதுள்ள ஆசையால் Pamellaவை கொடூரமாக கொன்று விட்டு அவரின் வயிற்றை கீரி குழந்தையை எடுத்திருக்கிறார்.

Categories

Tech |