கர்ப்பிணி பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு அருகே கணியனூர் பகுதியில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வாணிஸ்ரீ என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகும் நிலையில் 2 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் வாணிஸ்ரீ இரண்டாவதாக கர்ப்பம் தரித்துள்ளார். இதனையடுத்து வாணிஸ்ரீக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கும் வாணிஸ்ரீ உயிரிழந்துள்ளார். இதுகுறித்து ஆற்காடு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வாணிஸ்ரீயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.