Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கர்ப்ப காலத்தில் போலிக் ஆசிட் மாத்திரை ஏன் அவசியம்…? வாங்க பாக்கலாம்..!!

கர்ப்ப காலத்தில் பெண்கள் ஏன் போலிக் ஆசிட் மாத்திரையை சாப்பிட வேண்டும் என்கிறார்கள் தெரியுமா? வாங்க பார்க்கலாம்.

கர்ப்ப காலத்தில் போலிக் ஆசிட் மாத்திரைகள் என்பது மிகவும் அவசியம். கர்ப்பத்திற்கு திட்டமிடும் பெண்கள் மகப்பேறு மருத்துவமனை அணுகி போலிக் ஆசிட் மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை தான் அவர்களும் விரும்புகிறார்கள். ஏனெனில் இதில் வைட்டமின் பி சத்து உள்ளது. இதனால் உடல் பலவீனம், ரத்தசோகை பிரச்சனை சரியாவதோடு மகப்பேறு பிரச்சினைகளுக்கும் உதவுகிறது.

கரு உண்டாவதில் பிரச்சனை,குழந்தை வளர்ச்சியில் குறைபாடு போன்ற சிக்கல்கள் இருப்பவர்கள் போலிக் ஆசிட் மாத்திரையை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. பொதுவாக போலிக் ஆசிட் மாத்திரைகளை கர்ப்பகாலத்தில் தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது இல்லை. திருமணம் நிச்சயம் ஆன உடனேயே போலிக் ஆசிட் மாத்திரைகளை எடுத்துக் கொள்வது திருமணத்திற்குப் பின்பு குழந்தை பெறும் திட்டத்திற்கு மிகவும் நல்லது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |